search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் விற்பனை"

    கும்பகோணம்பேட்டை புதுத்தெருவில் பாக்கெட் சாராயம் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம்பேட்டை புதுத்தெருவில் பாக்கெட் சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் பேட்டை புதுத்தெரு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 50 லிட்டர் சாராயத்தை பாக்கெட்டில் நிரப்பி கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (வயது 40), வேல்முருகன் (35), தமிழ்செல்வன் (45) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் அரசலாறு வழிநடப்பை சேர்ந்த சாராய வியாபாரி அம்புரோஸ் ஏற்பாட்டில் சாராய பாக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்புரோசை தேடி வருகின்றனர். #tamilnews

    மயிலாடுதுறையில் சாராயம் விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அரிவளூர் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே சாராயம் விற்பனை நடப்பதாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சாராயம் விற்ற அரிவளூர் நடுத்தெருவை சேர்ந்த கணபதி மகன் முரசொலிமாறன் (வயது36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கோடங்குடி சோலையாம்பட்டினம் கிராமம் கடலாழி ஆற்றங்கரையோரம் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (31) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    இதேபோல் பாலையூர், குத்தாலம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட மேலஅய்யனார்குடியை சேர்ந்த அருள்தாஸ் (33), திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெரியதுளார் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் (58), எழுமகளூரை சேர்ந்த விஜயலட்சுமி (55), தரங்கம்பாடி திருவிளையாட்டம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ராஜாங்கம் (27), அறுபத்துமூவர் பேட்டையை சேர்ந்த ஜீவா (25), அசிக்காட்டை சேர்ந்த வாசுகி (40), மல்லியம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சாராயம் விற்றது தொடர்பாக மேலும் 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அனுமதியின்றி சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியில் சாராயம் விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூயிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார் இன்று காலை தண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரேமா (வயது38) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×